கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிங்கப்பூரில் ஊரடங்கு அமல்படுத்தபட்டு இருந்தது. இதையடுத்து, ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு வணிக நடவடிக்கைகள் முடங்கின. இந்த நிலையில் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடைகள் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.