உலக செய்திகள்

லாகூரை நோக்கி கட்சி தொண்டர்கள் படையெடுப்பு, நவாஸ் செரீப் விமானம் இஸ்லாமாபாத் திருப்பப்பட்டது

லாகூரை நோக்கி கட்சி தொண்டர்கள் படையெடுத்ததை அடுத்து நவாஸ் செரீப் விமானம் இஸ்லாமாபாத் திருப்பப்பட்டது. #NawazSharif

தினத்தந்தி

லாகூர்,

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாசுடன் இன்று கைது ஆகிறார். விமானத்தில் வந்து இறங்கியதும் நவாஸ் ஷெரீப்பையும், மகள் மரியம் நவாசையும் கைது செய்ய தேசிய பொறுப்புடைமை முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களை கைது செய்து ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைப்பதற்கு முடிவு செய்து, ஏற்பாடு ஆகி உள்ளது. நவாஸ் ஷெரீப்பையும், மரியம் நவாசையும் கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

அவற்றில் ஒன்று லாகூர் விமான நிலையத்திலும், மற்றொன்று இஸ்லாமாபாத் விமான நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்படும் என வெளியாகியது.

இதற்கிடையே லாகூரை நோக்கி அவரது கட்சியின் தொண்டர்கள் படையெடுத்து உள்ளனர், இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. லாகூரில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து நவாஸ் செரீப் விமானம் இஸ்லாமாபாத் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு