உலக செய்திகள்

ரஷியாவில் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு; பயணித்த 6 பேரும் பலி

விமானம் விபத்தில் சிக்கியதும், அதில் பயணித்த 6 பேரும் பலியாகி விட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் நேற்றுமுன்தினம் கப்ரோவ்ஸ்க் நகரத்தில் இருந்து 38 கி.மீ. தொலைவில் ஆன்டனோவ் ஆன்-26 ரக பயணிகள் விமானம் மாயமாகி விட்டதாக தூர கிழக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானத்தில் 6 சிப்பந்திகள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகின. 70-க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் மாயமான விமானத்தின் சிதைவுகள், நேற்று கப்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்பார்டக் ஸ்கை ரிசார்ட்டுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து அந்த விமானம் விபத்தில் சிக்கியதும், அதில் பயணித்த 6 பேரும் பலியாகி விட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலையே இந்த விபத்துக்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்