கோப்புப் படம் 
உலக செய்திகள்

தான்சானியாவில் 3 மாதங்களில் 6 பேரை கொன்று, தின்ற முதலைகள்..!

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மட்டும் 6 பேரை முதலைகள் கொன்று, தின்றுள்ளன.

தினத்தந்தி

டார் எஸ் சலாம்,

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் கிபாஹா மாவட்டம் கிமரமிசலே கிராமத்தில் ருவு என்கிற ஆறு உள்ளது. இந்த ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. ஆற்றில் தண்ணீர் எடுக்க செல்லும் கிராம மக்கள் பலர், முதலைகளுக்கு இரையாகும் சோக நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது.

எனவே, ஆற்றில் உள்ள முதலைகளை வேட்டையாடி அழிக்க வேண்டுமென வனத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காததால், கிராம மக்கள் முதலைகளுக்கு இரையாகும் சோகம் தொடர்கிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் தொகுதி எம்.பியை சந்தித்து மனு அளித்த கிபாஹா கிராம மக்கள், தண்ணீர் எடுக்க செல்லும் நபர்களை முதலைகள் கொல்வது அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மட்டும் 6 பேரை முதலைகள் கொன்று, தின்றதாகவும் தெரிவித்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை