உலக செய்திகள்

சோமாலியா: ராணுவத்தாக்குதலில் 73 பயங்கரவாதிகள் பலி

சோமாலியாவில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 73 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

மொகாதிசு,

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள அல்-சபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அங்கு கிஸ்மாயோ நகரத்துக்கு அருகே அமைந்துள்ள ராணுவ தளத்தின் மீது அல்-சபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால் உள்நாட்டுப்படைகள், சர்வதேச படைகளின் ஆதரவுடன் கடுமையாக எதிர் தாக்குதல் நடத்தின. இதில் அல்-சபாப் பயங்கரவாதிகள் நிலை குலைந்து போயினர்.

வான் வழியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 73 அல்-சபாப் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாகவும், அவர்களது கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை