மொகதிசு,
சோமாலியா நாட்டின் மத்திய பகுதியில் தேசிய ராணுவம் ஆதரவு பெற்ற கால்முடக் படைகளுக்கும், இஸ்லாமிய குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 40 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து குடியிருப்புவாசிகள் உள்பட பலர் சம்பவ பகுதிகளில் இருந்து தப்பி வேறு இடங்களுக்கு சென்றனர். அவர்களில் 1,005 சிறுவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் 2,009 பேரும் அடங்குவர். இதனை தகவல் துறை மந்திரி அகமது ஷிரே தெரிவித்து உள்ளார்.