உலக செய்திகள்

பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்த சில நாடுகளுக்கு தடை

பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்த சில நாடுகளுக்கு தடை செய்து தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், சமூக போராளிகள் உள்ளிட்டோரின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

இந்தியாவிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகள், தேர்தல் உத்தி நிபுணர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்போன்கள் உளவுபார்க்க இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்திய நாடாளுமன்றம் முடங்கி உள்ளது.

இந்த நிலையில், இந்த உளவு மென்பொருளைத் தயாரிக்கும் என்.எஸ்.ஓ. குழுமம் அதிரடியில் இறங்கி உள்ளது. சில குறிப்பிட்ட நாடுகள், அரசு அமைப்புகள் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்துவதை அந்த நிறுவனம் தடை செய்துள்ளது. சவுதி அரேபியா, துபாய், மெக்சிகோ நாட்டின் அரசு அமைப்புகள் தடை பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்