உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்காவின் நாடாளுமன்றத்தில் தீ விபத்து!

இன்று அதிகாலை நாடாளுமன்ற கட்டடத்தின் 3வது மாடியிலிருந்து தீ பரவ தொடங்கியுள்ளது.

கேப் டவுன்,

தென்ஆப்பிரிக்காவின் தலைநகர் கேப் டவுன் நகரில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர்.தீ மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

கேப் டவுன் நகரின் மையப்பகுதியில் இந்த கட்டடம் அமைந்துள்ளதால் நகர் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காட்சி தருகிறது.இன்று அதிகாலை நாடாளுமன்ற கட்டடத்தின் 3வது மாடியிலிருந்து தீ பரவ தொடங்கியுள்ளது.

இந்த தீ விபத்தினால் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்றும் 35 தீயணைப்புப்படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர் என்றும் கேப் டவுன் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை செய்தி தொடர்பாளர் ஜெர்மைன் கேரல்ஸ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...