உலக செய்திகள்

தென்கொரியாவில் புதிதாக 2,427 பேருக்கு கொரோனா பாதிப்பு

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சியோல்,

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 93 நாட்களாக அங்கு ஒரு நாள் பாதிப்பு ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது.

தலைநகர் சியோல் பகுதியில் சமூகப் பரவல் காரணமாக நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று பதிவான மொத்த பாதிப்பில், 833 பாதிப்புகள் சியோல் நகரத்திலிருந்து பதிவாகி உள்ளது.

கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 544 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், இறப்பு சதவீதம் 0.78 ஆக உள்ளது.

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,782 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2,88,822 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், குணமடைவோர் சதவீதம் 88.65 ஆக உள்ளது.

பிப்ரவரி 26ம் தேதி முதல் தொடங்கப்பட்ட தடுப்பூசி முகாம் மூலம் இதுவரை 3 கோடியே 98 லட்சத்து 23 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அங்குள்ள மக்கள் தொகையில் 77.6 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 55.5 சதவீதம் மக்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது