உலக செய்திகள்

விண்வெளி சுற்றுலாவின் 3-வது குழு பயணத்தை நிறைவு செய்தது ஜெப் பெசோஸ் நிறுவனம்

ஜெப் பெசோஸ் நிறுவனம் விண்வெளி சுற்றுலாவின் 3-வது குழு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

தினத்தந்தி

நியூயார்க்,

விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலாவாக அனுப்பிவரும் ஜெப் பெசோஸ் ராக்கெட் நிறுவனம் நேற்று ஆறு பேர் கொண்ட 3-வது குழுவினை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, பத்திரமாக திரும்ப கொண்டு வந்து சேர்த்தது.

இந்த வின்வெளி பயணத்தில் முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்டின் மூத்த மகள் ஷெப்பர்ட் சர்ச்லியும் பயணம் செய்துள்ளார்.

வெற்றிகரமாக பயணம் செய்த இவர்கள் பூமியிலிருந்து 62 மைல்கள் (100 கிலோமீட்டர்) உயரம் சென்று விண்வெளி அலகை ரசித்தனர். சுமார் 11 நிமிடங்கள் விண்வெளி பயணம் செய்த அவர்கள் பத்திரமாக பூமியை வந்தடைந்தனர். இந்த விண்வெளி சுற்றுலா குறித்து அவர்கள் கூறும்போது, மிகவும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்ததாகவும் விண்வெளி பயணம் மிகவும் அழகாக இருந்ததாகவும், புதிய அனுபவம் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு