Image Courtacy: AFP 
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஸ்பெயினில் முகக்கவசம் கட்டாயம்..!!

காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஸ்பெயின் மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மேட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் காய்ச்சல், கொரோனா மற்றும் பிற சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், இன்று முதல் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுகாதார வசதிகள் மற்றும் மருந்தகங்களில் முகக்கவசங்களின் பயன்பாடு கட்டாயமாக நிறுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அரசாங்க முடிவுகள், சில பிராந்திய நிர்வாகங்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது.

இந்த சூழலில் ஸ்பெயின் நாட்டின் வெலெனிக்கா, கடலொனியா, முர்சியா ஆகிய மாகாணங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து