உலக செய்திகள்

ஸ்பெயின் பயணம் நிறைவு: தமிழ்நாடு புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஸ்பெயினில் தமிழ் சமூகத்தினரை சந்தித்தது நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மேட்ரிட்,

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் அங்கு அவர் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

இதனிடையே ஸ்பெயினில் தமிழ் சமூகத்தினரை சந்தித்தது நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளேன். சிறப்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்பெயினில் தமிழ் சமூகத்தினரை சந்தித்தது நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும். மறக்க முடியாத நினைவுகளை ஸ்பெயின் நாட்டினரும் அங்குள்ள தமிழர்களும் அளித்தனர்" என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை