உலக செய்திகள்

டெல்டா வைரசிடம் இருந்தும் ஸ்புட்னிக்-வி பாதுகாக்கும்: ரஷியா தகவல்

இந்தியாவில் முதன் முதலாக காணப்பட்ட டெல்டா வைரஸ், இப்போது உலக நாடுகளில் எல்லாம் பரவி விட்டது. இந்த வைரஸ் வேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது.

தினத்தந்தி

இந்த நிலையில், இந்த வைரசுக்கு எதிரான பாதுகாப்பை ஸ்புட்னிக்-வி போன்ற மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள் கொண்டுள்ளன என்று ரஷியாவின் நோவாசிபிர்ஸ்க் மாகாண பல்கலைக்கழகத்தின் ஆய்வக தலைவரும், ரஷிய அறிவியல்கள் அகாடமியின் உறுப்பினருமான செர்ஜி நெடேசோவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து வருகிற தரவுகள், டெல்டா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி போன்ற மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள் 90 சதவீத பாதுகாப்பு இருப்பதை காட்டுகின்றன. ஏற்கனவே உருவாக்கிய தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதால் அவற்றை பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.

கமலேயா ஆராய்ச்சி மையத்தின் மக்கள் தொகை மாறுபாடு பொறிமுறைகள் ஆய்வுக்கூடத்தின் தலைவர் விளாடிமிர் குஷ்சின் கூறுகையில், டெல்டா வைரசால் ஏற்படுகிற கொரோனாவின் கடுமையான மற்றும் அபாயகரமான நிகழ்வுகளுக்கு எதிராக கிட்டத்தட்ட 100 சதவீத பாதுகாப்பை ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உறுதி செய்கிறது என தெரிவித்துள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை