கோப்புப்படம் 
உலக செய்திகள்

இலங்கையில் நாளை முதல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்

கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இலங்கையில் நாளை முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட உள்ளன.

தினத்தந்தி

கொழும்பு,

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது.

இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை நாளை (திங்கட்கிழமை) முதல் மூட அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேநேரம் சுகாதாரத்துறை தொடர்பான அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதைப்போல பள்ளிகளும் மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்து உள்ளது. மேலும் கடுமையான மின்வெட்டும் நிலவுவதால் ஆன்லைன் வகுப்புகளையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் இலங்கை மக்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்