உலக செய்திகள்

இலங்கையில் பசுவதை தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் பசுவதை தடை சட்டத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

உலகில் புத்த மதத்தை பின்பற்றும் மிகச்சில நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு பதவியேற்ற ராஜபக்சே சகோதார்களின் தலைமையிலான இலங்கை அரசு கடந்த 8 ஆம் தேதி நாட்டில் மாடுகளை கொலை செய்வதை தடை விதிப்பது தொடர்பான திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தது. இந்த திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவை ஒப்புதலையடுத்து உரிய விதிகள் பின்பற்றப்பட்டு விரைவில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இருப்பினும், பௌத்தர்கள் மறறும் இந்துக்கள் தவிர மாட்டிறைச்சியை உட்கொள்பவர்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இறைச்சியை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்