உலக செய்திகள்

இலங்கை: கடும் வெள்ளப்பெருக்கு - ஆயிரக்கணக்கானோர் சிக்கித்தவிப்பு

இலங்கையில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில், ஆயிரக்கணக்கானோர் சிக்கித்தவித்து வருகின்றனர்.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த ஐந்து மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாங்குளம், இரணைமடு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் நிரம்பி வழிகின்றன.வெள்ளப்பெருக்கால், முல்லைத் தீவுக்குச் செல்லும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களில் 13 ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 959 பேர் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களில், 8 ஆயிரத்து 539 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 52 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 400 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் நீரால் நிரம்பி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் 212 ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்