கொழும்பு,
18 தமிழக மீனவர்களை இலங்கை கோர்ட்டு நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்கள் 18 பேரும் நாடு திரும்பும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு செய்து உள்ளது.
விடுவிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்களும் இந்திய குடியுரிமை அதிகாரிகளிடம் இலங்கை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.