உலக செய்திகள்

இலங்கை விமான நிலையத்தை இந்தியா இயக்காது-பிரதமர் ராஜபக்சே தகவல்

இலங்கை விமான நிலையத்தை இந்தியா இயக்காது என்று இலங்கை பிரதமர் ராஜபக்சே தெரிவித்தார்.

தினத்தந்தி

கொழும்பு,


இலங்கை நாடாளுமன்ற தேர்தல், ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, ஹம்பன்தொட்டாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பங்கேற்றார்.

அங்கு அவர் பேசியதாவது:-ஹம்பன்தொட்டா அருகே எனது கிராமத்தில் உள்ள மாத்தளை சர்வதேச விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கி வந்தது. அந்த விமான நிலையத்தை இலங்கையுடன் சேர்ந்து இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு சிறிசேனா-ரணில் விக்ரமசிங்கே அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நானும், என் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் இந்தியாவுக்கு சென்றிருந்தபோது, மாத்தளை விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். எங்கள் வேண்டுகோளை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதனால்தான், விமான நிலையத்தை காப்பாற்ற முடிந்தது இவ்வாறு அவர் பேசினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை