உலக செய்திகள்

சூடானில் தவிக்கும் இலங்கை மக்களை மீட்க உதவி:இந்தியாவுக்கு இலங்கை நன்றி

சூடானில் தவித்து வருகிற இலங்கை மக்களின் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இலங்கை தெரிவித்துள்ளது.

கொழும்பு,

உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கை மக்கள் 30 பேரும் தத்தளித்து வருகின்றனர்.அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுகிறது. இதற்காக இந்தியாவை இலங்கை மனதார பாராட்டி உள்ளது.

இதையொட்டி இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

சூடானில் தவித்து வருகிற இலங்கை மக்களின் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களைப் பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் இந்தியா ஆதரவுக்கரம் நீட்ட முன் வந்துள்ளது. அதை நாங்கள் பாராட்டுகிறோம். அடுத்த சில நாட்களில் இது நடந்தேறும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்