உலக செய்திகள்

பதவியில் இருந்து விலக மாட்டேன்- இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டம்

இலங்கையில் நிலவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

கொழும்பு,

இலங்கையில் நிலவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. அதிபர் கோந்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள், எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று கோத்தபய ராஜபக்சே அறிவித்துவிட்டார்.பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலகலாம் என்று சில நாட்களாகவே தகவல் வெளியானபடி இருந்தது.

இந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார்.

மாறுபட்ட கொள்கைகளை கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்து கொள்ள முடியாதபோது இது போன்ற அரசியல் அமைப்புகளால் (இடைக்கால அரசாங்கம்) எந்த பயனும் இல்லை. நான் பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டேன்.

ஒரு வேளை இடைக்கால அரசாங்கம் அமைந்தாலும் நானே தலைவராக இருப்பேன். நாட்டில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. ஆனால் தீர்வு காண பேச்சு வார்த்தைக்கு அவர்கள் வர வில்லை. போராட்டக் காரர்கள் பேச்சுவார்த்தைக்கு வராதவரை போராட்டங்கள் தொடரவே செய்யும்.அவர்கள் தொடர்ந்து போராடி கொண்டிருக்க வேண்டியது தான். பேச்சுவார்த்தைக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அரசின் கதவு திறந்திருக்கும் என்றார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...