உலக செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே தம்பியை எதிர்த்து சஜித் பிரேமதாசா போட்டி

இலங்கையில் நவம்பர் மாதம் 16-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அவரது தம்பி கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார்.

தினத்தந்தி

கொழும்பு,

கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

பிரதமர் ரனில் விக்ரம சிங்கே, கட்சியின் துணைத்தலைவர் சஜித் பிரேமதாசா, நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா ஆகியோர் பெயர்கள் அடிபட்டன.

இந்தநிலையில், சஜித் பிரேமதாசா (வயது 52) போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இவர் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் ஆவார்.

ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரேமதாசாவை அதிபர் வேட்பாளராக ஒருமனதாக தேர்ந்து எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு