இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு கடந்த வாரம் வாயில் சிறு அறுவை சிகிச்சை நடந்தது. அதைத்தொடர்ந்து, ஏற்கனவே பங்கேற்பதாக இருந்த பல நிகழ்ச்சிகளை மகிந்த ராஜபக்சே தவிர்த்தார். டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அவர் இந்த முடிவை எடுத்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக, மகிந்த ராஜபக்சே பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளில் அவருக்கு பதிலாக அவரது மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்சே பங்கேற்றார்.