உலக செய்திகள்

விடுதலைப்புலிகள் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை முன்னாள் மந்திரி கைது

விடுதலைப்புலிகள் குறித்து பேசிய இலங்கை முன்னாள் மந்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையின் யாழ்ப்பாணத்தில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய இலங்கை மந்திரி விஜயகலா விடுதலைப்புலிகள் குறித்து பேசியது கடும் சர்ச்சையானது. விஜயகலா பேசும் போது, தமிழர்களின் நிலங்களை திரும்பக் கொடுத்த இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தலையால் நடந்தே ஜனாதிபதியை நாங்கள் தேர்வு செய்தோம். ஆனால் ஜனாதிபதி எங்களுக்கு என்ன செய்தார்? தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தோம் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும்.

எனவே வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், எங்களுடைய பிள்ளைகள் நிம்மதியாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பவேண்டுமாக இருந்தால் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும். தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்கவேண்டும் இவ்வாறு விஜயகலா பேசினார். விஜயகலா பேச்சு சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாக கூறி, உடனடியாக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், மேற்கூறிய பேச்சு தொடர்பாக, விஜயகலாவுக்கு அந்நாட்டு குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, இன்று காலை போலீசார் முன்பு ஆஜரான விஜயகலா கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயகலா, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?