உலக செய்திகள்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு: சஜித் பிரமேதாசா அறிவிப்பு

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாக சஜித் பிரமேதாசா அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவிற்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என்று குற்றம் சாட்டிய அந்நாட்டு மக்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். ரணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கோரியிருந்தார்.

துவக்கத்தில் ரணில் விக்ரமசிங்கேற்விற்கு ஆதரவு அளிக்க தயக்கம் காட்டி வந்த பிரதான எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரமதேசா, தற்போது ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். மக்களின் கொள்கைகளுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி செயல்பட்டால் ஆதரவு திரும்பப் பெறப்படும். நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கவே இந்த ஆதரவு எனவும் நிபந்தனை தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்