உலக செய்திகள்

சீனாவில் புயல், கனமழை; 11 பேர் பலி

சீனாவில் புயல், கனமழைக்கு 11 பேர் பலியானார்கள்.

தினத்தந்தி

பீஜிங்,

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் நாந்தோங் நகரை நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.

புயலைத் தொடர்ந்து அங்கு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதில் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியதால் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனிடையே புயல், மழையை தொடர்ந்து நாந்தோங் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

புயல், மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 102 பேர் படுகாயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு