உலக செய்திகள்

அமெரிக்க மாகாணங்களை புயல் தாக்கியது - 4 பேர் பலி

அமெரிக்க மாகாணங்களை புயல் தாக்கியதில் 4 பேர் பலியாயினர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தென் மாநிலங்களில் பலத்த புயல் தாக்கியது. அலபாமா, மிசிசிப்பி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்கள், புயலில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. பலத்த மழை பெய்தது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின. மிசிசிப்பி மாகாணத்தில் லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான ஆண் சிக்கிக்கொண்டார். படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.மேலும் 2 பேர் புயல் காற்றுக்கு மத்தியில் வாகனங்கள் ஓட்டும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

அலபாமா மாகாணத்தில் பெல் நகரத்தில் 42 வயதான பெண் ஒருவர் வீட்டின் மீது மரம் விழுந்து பலி ஆனார்.

புயல் பாதித்த மாகாணங்களில், அந்தந்த மாகாண அரசுகள் புயல் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்