ரோண்டா,
ஸ்பெயின் நாட்டின் தெற்கே ரோண்டா நகரில் லியோனார்டோ என்ற புயல் தாக்கியதில், 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழை பெய்துள்ளது. 24 மணிநேரத்தில் 35 செ.மீ. அளவுக்கு பெய்த மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பள்ளிகள் மூடப்பட்டன. ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ஆண்டலூசியாவின் தெற்கு பகுதியின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. 3,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர். கட்டிடம் விழுந்ததில் ஒருவர் காயமடைந்து உள்ளார்.
தொடர் மழையால் வயல்கள் வெள்ளம் சூழ்ந்தும், நீரில் மூழ்கியும் இருந்தன. கட்டிடங்கள், வீடுகள் மழை நீரால் சூழப்பட்டு இருந்தன.
இதேபோன்று போர்ச்சுகல் நாட்டிலும் வெள்ள பாதிப்பு, மரங்கள் முறிந்து விழுதல், நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகி இருந்தன. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் நிவாரண பணிகளில் ஈடுபட சென்றனர். இன்றும் மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.