மெக்சிகோ நகரம்
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் 12:53 மணி அளவில் மட்டியாஸ் ரோமெரோ எனும் நகரிலிருந்து 19.3 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியிட்டனர். இதையே மெக்சிகோவின் புவியதிர்ச்சி ஆய்வாளர்களும் உறுதி செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் 300 பேர் இறந்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் பிரதிபலிப்பாக கருதப்படக்கூடிய இந்த நிலநடுக்கத்தினால் மெக்சிகோ நகரில் மீட்புப்பணிகளை நிறுத்தியது. எனினும் தலைநகரம் இந்த நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டதாக தகவல் ஏதுமில்லை.