உலக செய்திகள்

ஈராக் மற்றும் ஈரான் நாடுகளில் கடுமையான நிலநடுக்கம்

ஈராக் நாட்டின் பாக்தாத் நகர் மற்றும் ஈரான் எல்லையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரம் மற்றும் அந்நாட்டின் எல்லையை ஒட்டிய ஈரான் நாட்டின் கெர்மன்ஷா நகரம் ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து ரிக்டர் அளவில் 3.0க்கு மேல் 2 நிலநடுக்கங்களும் உணரப்பட்டு உள்ளன.

அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், கெர்மன்ஷா நகரின் வடக்கு வடமேற்கு பகுதிக்கு 88 கிலோ மீட்டர் தொலைவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

கடந்த நவம்பரில் கெர்மன்ஷாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 530 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இது கடந்த 10 வருடங்களில் ஈரான் நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ஆகும்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை