உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.7 ஆக பதிவு

நிலநடுக்கம் பமியான் மற்றும் வார்தாக் போன்ற மேற்கு பகுதி மாகாணங்களில் உணரப்பட்டு உள்ளது.

காபூல்

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் இருந்து வடகிழக்கே 80 மைல்கள் தொலைவில் இந்துகுஷ் மலை பகுதியில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்த நிலநடுக்கம் பமியான் மற்றும் வார்தாக் போன்ற மேற்கு பகுதி மாகாணங்களில் உணரப்பட்டு உள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் சிக்கி மலை பிரதேச கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 2,200 பேர் வரை பலியானார்கள்.

அதன்பின்னர் சில வாரங்கள் கழித்து ரிக்டரில் 6.3 அளவில் ஏற்பட்ட மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 27 பேர் பலியானார்கள்.

SCROLL FOR NEXT