மணிலா,
தெற்கு பிலிப்பைன்சில் இன்று காலை 8.12 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 பதிவானது. இந்த நிலநடுக்கம் ஒரு நிமிடம் வரை நீடித்ததால் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்த மக்கள் உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் மற்றும் ஒரு பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது. பள்ளியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற ஒரு சிறுவன் மீது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 5 மாணவர்கள் காயமடைந்தனர்.
கோரனாடல் என்ற பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 66 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலியானார். 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் சுமார் 100 பேர் காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.