தலுகான்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே டக்கர் மாகாணத்தில் ஈஷ்காமிஷ் மாவட்டத்தில் பண்ட்காஷா கிராமத்தில் பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடியை தலீபான் பயங்கரவாத குழு ஒன்று திடீரென தாக்கியது.
இந்த சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 6 பேர் மற்றும் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான முல்லா அப்துல்லா நசிரி என்ற அபு அபிடா உள்பட 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதனை காவல் துறை செய்தி தொடர்பு அதிகாரி அப்துல் கலீல் ஆசிர் தெரிவித்து உள்ளார். இதுதவிர 5 பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் 2 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலீபான் உள்பட எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க முன்வரவில்லை.