உலக செய்திகள்

முழு ஓட்கா பாட்டிலை ஒரே மடக்கில் காலி செய்த மாணவர் கோமாவுக்கு சென்றார்

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ஓட்கா மது பாட்டிலை முழுவதுமாக குடித்து கோமா நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

ஜெபர்சன் சிட்டி,

அமெரிக்காவில் 19 வயதான டேனியல் சாண்டுல்லி என்பவர் மிசோரி பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் சேருவதற்கான உடன் இருப்பவர்கள் சொல்லை கேட்டு ஓட்கா பாட்டிலை முழுவதுமாக குடித்து கோமா நிலையில் மூளை பாதிப்புக்குள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

டேனியல் கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி மிசோரி பல்கலைக்கழகத்தின் ஹாஸ்டலில் சேருவதற்கான சென்ர இடத்தில் அங்குள்ளவர்கள் மற்றமாணவர்கள் விலையாட்டாக ஒரு பாட்டில் ஓடாக மதுவை ஒரே மடக்கில் குடிக்க முடியுமா என சாவால் விடுத்து உள்லனர்.

தன்னை நிரூபிக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக டேனியல் ஒரு பாட்டில் மதுவை குடிக்க போதை மூளைக்கு ஏறி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தொடர்ந்து டேனியலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பரிசோதனையில் அவரது இரத்தத்தில் ஆல்கஹால் உள்ளடக்கம் 0.486 சதவீதமாக இருந்ததுள்ளது, இது சட்டப்பூர்வ வரம்பை விட ஆறு மடங்கு அதிகமாகும்.

மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் டேனியல், புத்துயிர் பெற்று வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார், ஆனால் அவருக்கு குறிப்பிடத்தக்க மூளை பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட ஆவணத்தில், அவரால் பதிலளிக்க முடியவில்லை, அவருக்கு சுயநினைவு இல்லை மற்றும் பேசமுடியவில்லை கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து குடும்பத்தின் வழக்கறிஞர் டேவிட் பியாஞ்சி, தனது 30 வருட தொழில் அனுபவத்தில் தான் சந்தித்த மோசமான செயல் என கூறி உள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.