உலக செய்திகள்

நேபாளம்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 23 பேர் பலி

நேபாளத்தில் பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் உட்பட 23 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

காத்மாண்டு,

நேபாளத்தில் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

நேபாளத்தின் மேற்கு பகுதியில், தாவரவியல் சார்ந்த கிளப் பயிற்சிக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 37 பேர் பேருந்து ஒன்றில் நேற்று மாலை சென்றனர். அப்போது பேருந்து தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகினர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிவேகமாக பேருந்தை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேபாளத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, மோசமான சாலைகளால் மலைப்பாதைகளில் அதிக அளவில் விபத்துகள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து