லண்டன்
உலகில் அதிக அளவு மரணம் புற்று நோயால் ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் உலக நாடுகள் 29 வகை புற்று நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளது எனவும், அதில் எந்ததெந்த நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்பதை பட்டியலிட்டு உள்ளன.
2016 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக புதிய புற்றுநோய் ஏற்பட்டு உள்ளது. இந்த நோயால் மங்கோலியாவில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புற்றுநோய் பாதிப்பில் இங்கிலாந்து எட்டாவது இடத்தில் உள்ளது.
2016 ஆம் ஆண்டில் 1,00,000 மக்களுக்கு அதிகமான புதிய புற்று நோய்கள் தோன்றிய நாடுகள்:
* ஆஸ்திரேலியா (743.8)
* நியூசிலாந்து (542.8)
* அமெரிக்கா (532.9)
* நெதர்லாந்து (477.3)
* லக்சம்பர்க் (455.4)
* ஐலேண்டு (455.0)
* நார்வே (446.1)
* இங்கிலாந்து (438.6)
* அயர்லாந்து (429.7)
*டென்மார்க்(421.7)
2016 ல் 1,00,000 மக்களுக்கு குறைவான புதிய புற்றுநோய்கள் தோன்றிய நாடுகள்:
* சிரியா (85.0)
* பூடான் (86.0)
* அல்ஜீரியா (86.7)
* நேபால்(90.7)
* ஓமன் (94.9)
* மாலத்தீவுகள் (101.3)
*இலங்கை (101.6)
* னைஜர் (102.3)
* கிழக்குத் திமேர் (105.9)
* இந்தியா (106.6)