உலக செய்திகள்

நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஆய்வுகளை முடித்து கொண்டு சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட நால்வர் திங்கட்கிழமை பூமிக்கு திரும்புகின்றனர்.

தினத்தந்தி

சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட வீரர்கள் அனைவரும் திங்கள்கிழமையில் பூமி திரும்புவதாக நாசா தெரிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 26-ஆம் தேதியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இவர்கள் ஜூலை 14 ஆம் தேதியில் பூமி திரும்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்படும். பின்னர் மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்கும். சுமார் 24 மணி நேர பயணத்திற்கு பிறகு வருகிற 15-ந்தேதி பகல் சுமார் 3 மணி அளவில் பூமிக்கு திரும்புகின்றனர்.குறிப்பாக, வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் விண்கலம் பத்திரமாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்கா கடற்படையும் தயார் நிலையில் உள்ளது.  

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்