பமேகோ,
மாலி நாட்டின் மத்திய பகுதியில் மொப்தி என்ற இடத்தில் ராணுவ வாகனம் சென்ற வழியே திடீர் என்று மற்றொரு வாகனத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது.
இந்த தாக்குதலை தொடர்ந்து, துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இதில், ராணுவ வீரர்களில் 11 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் 8 பேர் உள்பட மொத்தம் 10 பேர் காயமடைந்து உள்ளனர்.
அவர்களை மீட்டு, வெளியேற்றும் நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டது.