கோப்புப்படம் 
உலக செய்திகள்

இலங்கையில் திடீர் திருப்பம்.. அதிபருக்கு எதிராக வாக்கெடுப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள், மூன்று முக்கிய வாக்கெடுப்புகள் நடைபெற உள்ளன.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் தொடர் போராட்டங்களை அடுத்து மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள், மூன்று முக்கிய வாக்கெடுப்புகள் நடைபெற உள்ளன. புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.

இதேபோல், அதிபர் கோத்தபய ராஜபக்ச மீது அதிருப்தி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்