உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை பயங்கரவாதி தனது உடலில் கட்டி வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதலை அரங்கேற்றினார்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தஸ்த் இ பார்சி பகுதியில் அமைந்துள்ள வாக்காளர் பதிவு மையத்தில், நேற்று காலையில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டி வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்து கொடூர தாக்குதலை அரங்கேற்றினார். இதில் அங்கு குழுமியிருந்த ஏராளமான பொதுமக்கள் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர்.

இந்த பயங்கர தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் உயிரிழந்தோரின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், மேலும் 21 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களையும் சேர்த்து இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை