உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவ பயிற்சி முகாமில் தற்கொலை படை தாக்குதல்: 4 ராணுவ வீரர்கள் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் ராணுவ பயிற்சி முகாமில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தில் இன்று காலை நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

காபூல் நகரத்தில் உள்ள ராணுவ பயிற்சி முகாமிற்கு அருகே, பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இந்த சம்பவத்தில் 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நஸ்ரத் ராஹிமி தெரிவித்தார். இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்