கோப்புப்படம்  
உலக செய்திகள்

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்- 4 வீரர்கள் உயிரிழப்பு !

பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தினத்தந்தி

பெஷாவர்,

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணம், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பட்டாசி செக்போஸ்ட் அருகே பாதுகாப்பு படையினர் வந்த வாகனம் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை பயங்கரவாதிகள் மோதச்செய்து பின்னர் வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். பொதுமக்கள் 2 பேர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். தெஹ்ரீக்-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு சண்டை நிறுத்தத்தை மேற்கொண்டபோதிலும், பழங்குடியின மாவட்டங்களில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்