உலக செய்திகள்

ஆப்கானில் நேட்டோ படையினரை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கு பக்க பலமாக நேட்டோ படையினர் உள்ளனர். ஆனால் அவர்களை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். கிழக்கு பகுதியில் அமைந்து உள்ள பர்வான் மாகாணத்தில் சாரிக்கர் என்ற இடத்தில் நேட்டோ படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்களைக் குறி வைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரும், ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த தகவலை மாகாண கவர்னர் செய்தி தொடர்பாளர் வஹிதா ஷக்கார் தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது