உலக செய்திகள்

நைஜீரியாவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 31 பேர் பலி

நைஜீரியாவில் தற்கொலைப்படைகள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்தனர்.

கானோ,

நைஜீரியாவில் போகோஹராம் பயங்கரவாதிகளுக்கும் நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக சண்டை நடைப்பெற்று வருகிறது.

இந்தநிலையில் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள டம்போவா நகரத்தில் போகோஹராம் பயங்கரவாதிகள் 2 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இதில் அப்பாவி மக்கள் 31 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.