காபூல்,
ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் தேர்தல் ஆணையாளர் யால்டா அசிமி வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு தற்கொலை படையை சேர்ந்த நபரொருவர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தில் தேர்தல் ஆணையாளருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலீபான் பயங்கரவாதிகள் பல ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சி மேற்கொண்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கத்தார் நாட்டின் தோஹா நகரில் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தபோதிலும், குண்டுவெடிப்பு தாக்குதல்களும், துப்பாக்கி சூடு தாக்குதல்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த தலீபான் பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்களில் 15 பேர் கொல்லப்பட்டனர்.