பெஷாவர்,
பாகிஸ்தானில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடங்கியதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இத்தாக்குதல்களை அடுத்து ராணுவம் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முற்றுகையிட்டு உள்ளது பயங்கரவாதிகளை அழிக்க. இந்நிலையில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணம் சார்சாத்தா நகரில் கோர்ட்டில் தற்கொலை பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர். கோர்ட்டு வளாகத்தில் வழக்கமான பணிகள் நடைபெற்று வந்தபோது பயங்கரவாதிகள் இத்தாக்குதலை முன்னெடுத்து உள்ளனர்.
தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்த்தவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்து உள்ள பேட்டியில், குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அதிகமான சடலங்கள் காணப்படுகிறது என கூறிஉள்ளார். குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து உயிர்தப்பியவர்கள் அனைவரும் குண்டுவெடிப்பில் அதிகமனோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து வருகின்றனர்.