உலக செய்திகள்

ஈரானில் ருஹொல்லா கொமெய்னி நினைவிடத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்

ஈரானில் புரட்சியாளர் ருஹொல்லா கொமெய்னி நினைவிடத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

தெக்ரான்,

தெக்ரானில் உள்ள ஈரான் பாராளுமன்றம், அந்நாட்டின் புரட்சியாளர் ருஹொல்லா கொமெய்னி நினைவிடம் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாராளுமன்றத்தில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் பலர் காயம் அடைந்து உள்ளதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ருஹொல்லா கொமெய்னி நினைவிடத்திற்குள் 4 பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். தற்கொலை பயங்கரவாதி ஒருவன் தன்னுடைய உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளான்.

இதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பலர் காயம் அடைந்து உள்ளனர். உயிரிழந்தது தாக்குதல் நடத்திய பயங்கரவாதியா என தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இதற்கிடையே மொமெய்னி மெட்ரோ ரெயில் நிலையத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்களுடன் பாதுகாப்பு படையினர் சண்டையில் ஈடுபட்டு உள்ளனர் எனவும் அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு