வாஷிங்டன்,
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அமெரிக்க செனட் சபையின் மூத்த எம்.பி.களான ஜான் கார்ரின் மற்றும் மார்க் வார்னர் மற்றும் விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக கட்சியை சேர்ந்த மார்க் வார்னர் தனது வாழ்த்து செய்தியில் ,75 ஆண்டுகள் சுதந்திரத்துக்காக இந்திய மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான உறவின் வலிமை இப்போது முன்னெப்போதையும் விட முக்கியமானது. 75 ஆண்டுகளாக இந்தியா ஒரு வலுவான நிகழ்ச்சியான ஜனநாயகமாக எதிர்காலத்துக்கு நகர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.