உலக செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் டிரம்பிற்கு வெற்றி

அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டிரம்பின் கொள்கைக்கு ஆதரவாக ஆணையிட்டுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்

டிரம்ப் பதவியேற்ற பின்பு ஆறு இஸ்லாமிய நாடுகளுக்கு பயணத்தடை, கட்டுப்பாடுகளை 90 நாட்களுக்கு விதித்தார். இதன் மூலம் அந்நாட்டினர் அமெரிக்காவிற்கு சகஜமாக வந்து செல்வது தடைப்பட்டது. எனினும், கீழமை நீதிமன்றங்கள் இந்த ஆணைக்கு தடை விதித்தன.

இச்சூழ்நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் அரசு இந்த ஆணையை அமல்படுத்தலாம் என்று அனுமதித்துள்ளது. அதிபர் டிரம்ப் கடந்த வாரம் நீதிமன்றம் அனுமதித்தால் அடுத்த 72 மணி நேரத்தில் தடை அமலுக்கு வரும் என்றார்.

இத்தடையே அதிபர் டிரம்பின் பதவியேற்ற குறுகிய காலத்தில் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய சட்ட விவகாரம் ஆகும்.

நீதிமன்றம் மேற்கொண்டு வழக்கின் வாதங்களை இன்று கேட்கவுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்