உலக செய்திகள்

உளவு பார்த்ததாக சந்தேகம்: பொது இடத்தில் 10 பேர் தூக்கிலிட்டு கொலை சோமாலியா பயங்கரவாதிகள் அட்டூழியம்

உளவு பார்த்ததாக சந்தேகம், பொது இடத்தில் 10 பேரை தூக்கிலிட்டு கொலை செய்ததாக பிரான்ஸ் நாட்டு வானொலி தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

சோமாலியா நாட்டைச் சேர்ந்த அல் ஷாபாப் இயக்கத்தின் பயங்கரவாதிகள், கடந்த வாரம் 10 பேரை பொது இடத்தில் தூக்கிலிட்டு கொலை செய்ததாக பிரான்ஸ் நாட்டு வானொலி தெரிவித்துள்ளது. இவர்கள் 10 பேரும் வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாக பயங்கரவாதிகள் சந்தேகப்பட்டு குற்றம் சாட்டினர். 5 பேர், கென்யா, சோமாலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் உளவு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 4-ந் தேதி கொல்லப்பட்டனர். மற்ற 5 பேரும் மறுநாள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் வானொலி தெரிவித்தது.

சோமாலியாவின் தென்பகுதியில், மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் பொது இடத்தில் இந்த கொலைகள் நடந்ததாக கூறியது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்