உலக செய்திகள்

ஐநா சீர்திருத்தங்களுக்கான பேச்சுவார்த்தையை விரைவில் துவங்கவும் - சுஷ்மா

ஐநா சபையின் சீர்திருத்தங்களை விரைவில் துவங்கும்படி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினத்தந்தி

ஐநா சபை

ஐநா சபையில் பேசும்போது அவர், கடந்த கூட்டத்தில் 160 நாடுகள் ஆதரவு தெரிவித்த தீர்மானத்தின் அடிப்படையில் விவாதங்களை நடத்த துவங்க வேண்டும். இது முன்னுரிமை கொண்டதாக இருக்க வேண்டும் என்றார் சுஷ்மா.

அது நடந்தால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார் சுஷ்மா. இதே போன்ற கோரிக்கையை சமீபத்திய ஜி-4 மாநாடும் கேட்டுக்கொண்டது. இந்தியா ஐநாவின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை பெற வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளன. இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஐநா சபை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இந்த சீர்திருத்தத்திற்கான பேச்சுக்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வருகின்றன என்பதையும் சுஷ்மா சுட்டிக்காட்டினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து